ஏதோ சைகிறாய், என்னை ஏதோ சைகிறாய்
என்னை என்னிடம், நீ அறிமுகம் சைகிறாய்
ஏதோ சைகிறாய், என்னை ஏதோ சைகிறாய்
என்னை என்னிடம், நீ அறிமுகம் சைகிறாய்
உன்னோடு பேசினால்
உள் நெஞ்சில் மின்னல் தோன்றுதே
கண்ணாடி பார்க்கையில்
என் கண்கள் உன்னை காட்டுதே
பெண்ணே, இது கனவா, நிஜமா?
உன்னை கேட்கிறேன்
அன்பே, இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா, இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய்
தெரிகிறதே
பெண்ணே, என் கடிகாரம், என் பேச்சை கேட்கவில்லை
உன்னை கண்ட நொடியோடு நின்றதடி ஓடவில்லை
இதுவரை யாரிடமும் என் மனது சாயவில்லை
என்ன ஒரு மாயம் செய்தாய் என்னிடம் நானுமில்லை!
என்ன இது, என்ன இது, என் நிழலை காணவில்லை?
உந்தன் பின்பு வந்ததடி இன்னும் அது திரும்பவில்லை
எங்கே என்று கேட்டேன்
உன் காலடி காட்டுதடி
அன்பே, இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா, இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய்
தெரிகிறதே
காதல் நெஞ்சம் பேசிக்கொள்ள, வார்த்தை ஏதும் தேவையில்லை
மனதில் உள்ள ஆசை சொல்ல, மௌனம் போல மொழி இல்லை
இதுவரை என் உயிரை இப்படிச் நான் வாழ்ந்ததில்லை
புதுப்புது தோற்றமிது வேறதுவும் தோன்றவில்லை
நேற்று வரை வானிலையில் எந்த ஒரு மாற்றமும் இல்லை
இன்று என் வாசலோடு கண்டுகொண்டேன் வானவில்
ஒரே ஒரு நாளில்
முழு வாழ்க்கை வாழ்ந்தேனே
அன்பே, இந்த நிமிடம் நெஞ்சுக்குள் இனிக்கிறதே
அடடா, இந்த நெருக்கம் மயக்கமாய் இருக்கிறதே
உன்னால் இந்த உலகம் யாவுமே புதிதாய்
தெரிகிறதே
ஏதோ சைகிறாய், என்னை ஏதோ சைகிறாய்
என்னை என்னிடம், நீ அறிமுகம் சைகிறாய்
ஏதோ சைகிறாய், என்னை ஏதோ சைகிறாய்
என்னை என்னிடம், நீ அறிமுகம் சைகிறாய்