0:00:03.491,0:00:05.337 வில்லியம் கம்குவாம்பாவின் உங்கள் எண்ணங்களை முழுமைப்படுத்துங்கள் என்ற உரையை கேட்டப்பின் 0:00:05.337,0:00:09.066 நான் TED உரைகளை மொழியாக்கம் செய்ய ஆரம்பித்தேன் 0:00:09.066,0:00:11.438 இவ்வுரையைப் பற்றி என் மகனிடம் கூறினேன் 0:00:11.438,0:00:14.056 அவன் என்னை நம்பவில்லை. அவன் சொனான் " அவர் பள்ளியில் இருந்து வெளியேற்றப்பட்டவர் அல்லவா" 0:00:14.056,0:00:16.365 " அவருக்கு ஆங்கிலமும் தெரியாது. இதனை எப்படி செய்திருப்பார் ?" 0:00:16.365,0:00:18.229 நான் சொன்னேன் " நான் மொழியாக்கம் செய்து தருகிறேன்" 0:00:18.229,0:00:22.133 " என் மகன் ஒவ்வொரு சொல்லையும் படிக்க வேண்டும் " 0:00:22.133,0:00:24.793 [W. Davis] மொழி என்பது வார்த்தைகளின் தொகுப்போ 0:00:24.793,0:00:26.757 அல்லது இலக்கண விதியோ மட்டும் அல்ல 0:00:26.757,0:00:29.274 அது மனிதனின் ஆன்ம உணர்ச்சி 0:00:29.274,0:00:32.211 அது இவ்வொரு இனத்தின் பண்பாட்டை பொருள் உலகிற்கு 0:00:32.211,0:00:33.627 கொண்டு செல்லும் ஆன்மாவின் வாகனம். 0:00:33.627,0:00:37.016 TED-இல் நாம் செய்வதெல்லாம் இந்த ஒரே நோக்கத்துடன்தான் செயல்படுகிறது 0:00:37.016,0:00:39.099 அதுதான் சிந்தனையை பரப்புதல் 0:00:39.099,0:00:41.628 சிந்தனையைப் பரப்புதல் நமது இலக்கெனில், ஒரு கணம் சிந்தித்தால் 0:00:41.628,0:00:44.431 நாம் ஆங்கிலத்தில் மட்டும் பேசுவது இதற்கு முரணாக இருக்கின்றது 0:00:44.431,0:00:47.887 நமது செயலின் அடிப்படையே தொடர்பு கொள்வதுதான் 0:00:47.887,0:00:49.397 அனைவருக்கும் சிறந்த எதிர்காலத்தை வடிவமைக்கும் பணிக்கு 0:00:49.397,0:00:52.167 நிறைய பேர் இருக்கின்றார்கள் 0:00:52.167,0:00:54.984 அவர்களை நாம் இணைக்கவில்லையென்றால், அது பைத்தியகாரத்தனம் 0:00:54.984,0:00:56.819 [K. Aparta]அவர்களுக்கு எழுதுவேன், இந்த உரைகளின் 0:00:56.819,0:00:58.424 எழுத்துப்படிகள் காது கேளாதவர்களுக்கும் 0:01:00.029,0:01:01.634 மற்ற நாடுகளில் வாழ்பவர்களுக்கும் தேவை 0:01:01.634,0:01:03.404 ஒரு சில குறிப்பிட்ட உரைகளை மிகுந்த ஆர்வத்துடன் கேட்கும் 0:01:03.404,0:01:05.982 சில மனிதர்கள் கண்டிப்பாக இருப்பார்கள் 0:01:05.982,0:01:09.402 அவர்களுக்கு துணைத்தலைப்புகள் அவர்களின் மொழியில் இருக்க வேண்டும் 0:01:09.402,0:01:12.089 தொடக்கத்தில் நான் என் சகோதரிக்காக மட்டும் மொழிப்பெயர்க்க தொடங்கினேன் 0:01:12.089,0:01:13.048 கசக்ஸ்தானில் உள்ள சிறியப் பட்டணத்தில் அவள் என் பெற்றோருடன் வசிக்கின்றாள் 0:01:13.048,0:01:16.866 நான் அங்கிருந்துதான் வந்தேன் 0:01:16.866,0:01:20.639 உலகை உணர்ந்து கொள்ள அவளுக்கு அப்படி ஒரு வாய்ப்பும் கிட்டிடவில்லை 0:01:20.639,0:01:23.886 பிறகுதான் நான் உணர்ந்தேன் என் குடும்பத்தினருக்கு மட்டும் அல்ல 0:01:23.886,0:01:27.674 யார் யார் உஸ்பெக்கிஸ்தான் மொழி பேசுகின்றனரோ, அனைவருக்கும் இது பயனாக இருக்கும் 0:01:27.674,0:01:32.666 [M. Pagel] சிறகினை விரித்து உலகினை வலம் வரும் பறவையைப்போல 0:01:32.666,0:01:36.479 மொழி உலக மனிதர்களை இணைக்கும் ஒரு தளமாக செயல்படுகிறது 0:01:36.479,0:01:39.007 நம்முடைய பேச்சாளர்கள் அவர்களின் துறையில் முன்னணியில் உள்ளவர்கள் 0:01:39.007,0:01:41.207 எனவே அவர்களின் உரையை மொழியாக்கம் செய்யும்பொழுது அவர்கள் பயன்படுத்தும் 0:01:41.207,0:01:44.745 பல சொற்களுக்கு அகராதியில் விளக்கம் கிடைப்பதில்லை 0:01:44.745,0:01:48.466 TED உரையை மொழியாக்கம் செய்ய பல ஆய்வுகளைச் செய்ய வேண்டியுள்ளது 0:01:48.466,0:01:51.031 அது எவ்வளவு நுட்பம் சார்ந்தது, எத்தனை சொற்கள் என பார்க்க வேண்டி இருக்கும் 0:01:51.031,0:01:52.668 அதற்கு 10 மணி நேரம் கூட ஆகலாம் 0:01:52.668,0:01:55.923 நான் பேச்சாளரைப் பற்றியும் அவர் எழுதிய புத்தகங்களையும் படிப்பேன் 0:01:55.923,0:01:57.931 என வே முழுமையான உள்ளடக்கம் எனக்கு புரியும் 0:01:57.931,0:02:00.095 இந்த மொழிப்பெயர்ப்பாளர் சமூகத்தினால் 0:02:00.095,0:02:03.298 உரைகள் எந்த மொழியில் இருந்தாலும், அவ்வுரையின் 0:02:03.298,0:02:05.096 சிறந்த சிந்தனைகள் உடனுக்குடன் தெரிந்து கொள்ளும் வாய்ப்பு நமக்கு கிட்டியுள்ளது 0:02:05.096,0:02:08.229 இந்த உரைகளை ஆங்கிலம் பேசும் சமூகத்திற்கும் மற்ற சமூகத்திற்கும் 0:02:08.229,0:02:23.192 கொண்டு செல்ல முடிகிறது. 0:02:23.192,0:02:28.296 இந்த சிந்தனைகளின் வழி நிறைய பேர் பயன்பெறுவதற்காக நான் மொழியாக்கம் செய்கின்றேன் 0:02:28.296,0:02:31.049 இது சிந்தனையை பகிர்ந்து கொள்ள வேண்டும் என நினைக்கும் 0:02:31.049,0:02:33.109 நண்பர்களின் பெருந்தன்மையாகும். 0:02:33.109,0:02:36.871 இதன் வழி மக்களுக்கு எழுச்சியும், சிலருக்கு நம்பிக்கையும் ஊட்ட முடியும் 0:02:36.871,0:02:55.664 இதன் வழி உலகில் பலவற்றை நம்மால் மாற்ற முடியும்