வணக்கம் என் பெயர் சிமோன் நீங்கள் அறிவீர்கள், மேடை பதற்றம் பற்றி, மக்கள் என்ன கூறுவார்கள் என்று பார்வையாளர்களை நிர்வாணமாக உருவகபடுத்தி கொள்ளலாமா? இவை நம்மை நன்றாக உணரவைக்கும். ஆனால் நான் நினைத்தேன் - 2018ல் , நிர்வாணமாகக் உருவகபடுத்தி கொள்வது வித்தியாசமான மற்றும் தவறான உணர்கிறேன் இது, பழமைலிருந்து விலகுவதற்க்கு எப்படி கடினமாக உழைக்கிறோமோ அது போல ஒரு புதிய முறையை கையாள வேண்டும் மேடையில் பதற்றமாக இருந்தால். என்ன வேண்டும் என்று எனக்கு தெரியும் நீங்கள் என்னைப் பார்க்கும் அளவுக்கு நானும் உங்களைபார்க்க முடிந்தால் சிறிது கூடவும் கூட. அதற்கு எனக்கு நிறைய கண்கள் தேவை அப்போழுது நாம் இருவரும் வசதியாக உணரமுடியும், சரியா? எனவே, இந்த சொற்பொழிவிற்க்கு நான் ஒரு சட்டை செய்தேன். (சத்தம்) (சிரிப்பு) இது கூகிள் கண்கள். இதற்கு எனக்கு 14 மணி நேரம் பிடித்தது மற்றும் 227 கூகிள் கண்கள் தேவைபட்டது இந்த சட்டை செய்ய. இப்போது, நீங்கள் பார்க்க முடிகிறது அளவிற்கு நானும் உங்களை பார்க்கிறேன் அதனால், நான் இந்த சட்டையை பாதி அளவில் செய்தேன் மற்ற பாதி இதை செய்யும். (கூகிள் கண்கள் சறுக்கு) (சிரிப்பு) அதனால் இது போன்று நிறைய செய்கிறேன். நான் ஒரு பிரச்சனை பார்க்கும் போது இந்த வகையான தீர்வை கண்டுபிடிக்கிறேன் உதாரணமாக, உங்கள் பற்கள் துலக்குதல். இப்படி தான், நாம் செய்ய வேண்டும், ஒரு வகையான அலுப்பான வேலை, யாரும் அதை விரும்பவில்லை. ஆனால் ஏழு வயதுடைய பார்வையாளர்கள் இங்கு இருந்தால், அவர்கள் "ஆமாம்!" என்று குதித்து இருப்பார்கள் இதற்கு ஒரு இயந்திரம் இருந்தால், எப்படி இருக்கும்? (சிரிப்பு)| அதை நான் அழைக்கிறேன் ... நான் அழைக்கிறேன் "டூத் பிரஷ் ஹெல்மெட்" (சிரிப்பு) (ரோபோ கை சலசலப்பு) (சிரிப்பு) (கைத்தட்டல்) எனவே இந்த ஹெல்மெட்டை, 10-ல் '0' பல்மருத்துவர்கள் பரிந்துரைக்கிறார்கள் அது நிச்சயமாக பல்மருத்துவ உலகத்தில் புரட்சியை உருவாக்காது ஆனால் அது என் வாழ்க்கையை முற்றிலுமாக மாற்றியது. நான் இந்த ஹெல்மெட்டை மூன்று ஆண்டுகளுக்கு முன்பு முடித்துவிட்டேன் நான் அதை முடித்த பிறகு, நான் என் அறைக்கு சென்று எனது கேமராவை கொண்டு, நான் ஏழு நோடிகள் கொண்ட கிளிப்பை படமாக்கினேன் இப்போது இது ஒரு அழகான நவீன தேவதையின் கதை இணையத்தில் பதிவேற்றபட்டது, இணையம் என்னும் சூறாவளி இந்த பெண்ணை எடுத்துகொண்டது, ஆயிரக்கணக்கான ஆண்கள் கருத்து பகுதிக்கு வந்து திருமணம் செய்து கொள்ளகேட்டனர் (சிரிப்பு) அனைவரையும் அலட்சியம் செய்து YouTube தொடங்குகிறாள் தொடர்ந்து ரோபோக்கள் கட்டுகிறாள். அப்போதிருந்து, நான் இந்த வகையான பிம்பத்தை இணையத்தில் உருவாக்கிகொண்டேன் ஒரு பயனற்ற இயந்திரங்கள் கண்டுபிடிப்பாளராக நாம் எல்லாருக்கும் தெரியும் எளிதாக ஒரு துறையின் தலைமைக்கு வரும் வழி மிக சிறிய தலைப்பினை தேர்வு செய்ய வேண்டும். (சிரிப்பு) (கைத்தட்டல்) அதனால் என் இயந்திரங்கள் பற்றி, YouTube சேனலை இயக்கினேன் நான் முடி வெட்டும் இயந்திரம் செய்தேன், "drones " உதவிகொண்டு (தேனீ பறக்கும் சத்தம்) (சிரிப்பு) (தேனீ பறக்கும் சத்தம்) (சிரிப்பு) (பறக்கும் சத்தம்) (சிரிப்பு) (கைத்தட்டல்) இந்த இயந்திரம் காலையில் எழுந்திருக்க உதவும் (அலாரம்) (சிரிப்பு) (வீடியோ) சிமோன்: ஓ! இந்த இயந்திரம் எனக்கு காய்கறிகளை வெட்ட உதவுகிறது. (கத்திகள் வெட்டுவது) நான் ஒரு பொறியாளர் அல்ல. நான் பள்ளியில் பொறியியல் படிக்கவில்லை. ஆனால் நான் உயர்ந்த லட்சியமுடைய மாணவியாக வளர்ந்தேன். நடு, உயர்நிலை பள்ளிகளில், எப்போதும் 'A' எடுத்தேன் அந்த வருடத்தின் உயர் தகுதியில் பட்டம் பெற்றேன். ஆனால் மறுபக்கத்தில், நான் பொதுவெளி நடவடிக்கைகளில் மிகவும் பின் தங்கி இருந்தேன் இதோ ஒரு மின்னஞ்சல் , என் சகோதரனுக்கு அப்போது அனுப்பியது "உனக்கு புரியாது எனக்கு எவ்வளவு கடினம் இதை ஒப்புக்கொள்ள. நான் சங்கடமாக உணர்கிறேன். மற்றவர்கள் என்னை முட்டாள் என நினைப்பதை அப்போது நான் அழு ஆரம்பிக்கிறேன். அடக்கடவுளே. " இது, நான் தற்செயலாக எங்கள் வீட்டை எறித்ததை பற்றி இல்லை. நான் மின்னஞ்சலில் எழுதியதும் மற்றும் மிகவும் வருந்திய விஷயம் நான் ஒரு கணித தேர்வில் "B' வாங்கியதால் எனவே ஏதோ நடந்திருக்கிறது, இங்கேயும் அங்கேயும். (சிரிப்பு) அந்த விஷயங்களில் ஒன்று பருவமடைந்தது. (சிரிப்பு) உண்மையில் அழகான நேரம். இதுவும் தவிர எனக்கு ரோபோக்கள் செய்வதில் ஆர்வம் வந்தது, நான் வன்பொருள் பற்றி சுயமாக படிப்பதற்க்கு விரும்பினேன் ஆனால் வன்பொருள் வடிவமைப்பு, குறிப்பாக சுயமாக செய்வது உண்மையில் அது கடினமான செயல் இதில் தோல்விக்கு அதிக வாய்ப்புள்ளது இதுவும் தவிர இதில் முட்டாளாக உணர்வதற்க்கு அதிக வாய்ப்புள்ளது இதுவே எனது மிக பெரிய பயம் இருந்தது. அதனால் 100% உத்தரவாதத்திற்க்கு, நான் ஒரு அமைப்பை கொண்டு வந்தேன். எனது இந்த அமைப்பில், தோல்வி கிட்டத்தட்ட சாத்தியமற்றது. அதற்கு பதிலாக இதில் வெற்றி பெறும் முயற்சி தேவையற்றது. நான்தோல்வியடையும் விஷயங்களை உருவாக்க முயற்சிக்கிறேன் நான், அச்சமயத்தில் இதை உணர்வதில்லை என்றாலும் முட்டாள்தனமான காரியங்களை உருவாக்குதல் உண்மையில் புத்திசாலிதனமானது ஏனெனில் நான் வன்பொருள் பற்றி சுயமாக கற்ற எண்ணிருந்தேன் வாழ்க்கையில் முதல் முறையாக, என் பொதுவெளி திறன் சவாலை சமாளிக்க அவசியம் இல்லை. இவ்வாறாக, நான் எல்லா அழுத்தங்களையும், எதிர்பார்ப்புகளையும் நீக்கிவிட்டதால் அந்த அழுத்தம் விரைவிலேயே உற்சாகமாக மாற்றடைந்தது அது என்னை விளையாட அனுமதித்தது. எனவே கண்டுபிடிப்பாளராக, மக்கள் போராடும் விஷயங்களில் எனக்கு ஆர்வம் வந்தது. இது சிறிய அல்லது பெரிய அல்லது நடுத்தர அளவிலான விஷயங்களாக இருக்கலாம் மற்றும் ஒரு TED பேச்சு கொடுக்கும் ஏதாவது புதிய சிக்கலுடைய விஷயங்கள் எதையும் நான் தீர்க்க முடியும். ஒரு சிக்கலை அடையாளம் காண்பது என் செயல்பாட்டில் முதல் படி ஒரு பயனற்ற இயந்திரத்தை உருவாக்க. எனவே, இங்கு வருவதற்கு முன் இந்த சொற்போழிவிற்க்கு வரும்முன், எனக்கு வரும் சிக்கல்கள் என்ன என நினைத்தேன். என்ன சொல்லவேண்டும் என மறந்துவிடுவது மக்கள் சிரிக்க மாட்டார்கள் - அது நீங்கள்தான். அல்லது இன்னும் மோசமாக, தவறான விஷயங்களுக்கு நீங்கள் சிரிப்பது- சிரிப்பது பரவாயில்லை நன்றி. (சிரிப்பு) அல்லது பதற்றமடையும்போது, என் கைகள் ஆடும் பழக்கம் அதைப் பற்றி எனக்கு சுய-உணர்வு இருக்கிறது. அல்லது எனது ஆடை முழுநேரமும் திறந்து இருந்தது நீங்கள் கவனித்தீர்கள் ஆனால் நான் தவறவிட்டேன், ஆனால் அது மூடியுள்ளது, நல்லது. ஆனால் நான் உண்மையில் பயப்படுவது என் ஆடும் கைகளை பற்றி. எனக்கு நினைவில் உள்ளது, குழந்தை இருந்த பொழுது பள்ளி விழாக்களின் பொழுது நான் காகித குறிப்புகளை வைத்திருப்பேன், மற்றும் இந்த குறிப்பைகளை புத்தகத்திற்க்கு பின்னால் வைத்திருப்பேன் அதனால் குறிப்புகளை நடுக்கத்துடன் அசைப்பதை மக்கள் பார்க்க முடியாது. நான் நிறைய பேசி இருக்கிறேன். நான் அறிவேன், இங்கு இருக்கும் பாதி பேர் என்ன நினைபார்கள் என்று "பயனற்ற இயந்திரங்கள் வேடிக்கையானது ஆனால் எப்படி இது வியாபாரத்தை உருவாக்குகிறது? " பேசுவது, அதன் ஒரு பகுதிதான். அமைப்பாளர்கள் ஒரு கிளாஸ் தண்ணீரை இங்கு வைத்து இருப்பார்கள் தாகம் எடுத்தால் குடிக்க ஏதாவது இருக்கும், மற்றும் எனக்கு எப்போழுதுமே தண்ணீர் குடிக்க வேண்டும், ஆனால் கிளாசை எடுக்கம் தைரியம் இல்லை ஏனென்றால், என் கைகளை ஆடுவதை பார்வையாளர்கள் பார்க்க கூடும். அதனால் ஒரு புது இயந்திரம், தண்ணீர் கொடுப்பதற்க்கு? இந்த பெண்ணிடம் விற்க்கபட்டது. இதை எடுத்து வேண்டும், ஏனெனில் வேறு ஒரு விஷயம் இருக்கிறது - (கூகிள் கண்கள் சறுக்கு) ஓ.. (சப்தம்) (சிரிப்பு) என்ன பெயர் வைப்பது என்று எனக்கு தெரியவில்லை, நான் இப்படி நினைக்கிறேன் "தலையை வலம் வரும் சாதனம்," ஏனெனில் இது உங்களை சுற்றி இந்த தளத்தில் சுழலும் எதையும் இதில் நீங்கள் வைக்க முடியும். அது ஒரு கேமரா இருக்கலாம்; உங்கள் தலையின் புகைப்படங்களைப் எடுக்கலாம். உங்களுக்கு இதை பிடித்து இருக்கும் -- இது ஒரு பல்திறன் இயந்திரம் (சிரிப்பு) சரி, மற்றும் நான் - அதாவது, நீங்கள் சிற்றுண்டிகளை வைக்கலாம், உதாரணமாக, நீங்கள் விரும்பினால். என்னிடம் சிறிது பாப்கார்ன் இருக்கிறது. அதில் சிறிது போல வைத்து. நீங்கள் விரும்பும்போது அறிவியலுக்காக சில தியாகம் - சில பாப்கார்ன் தரையில் விழுகிறது. இதை இப்படி சுற்றுவோம் (ரோபோ சத்தம்) (சிரிப்பு) ஒரு சிறிய கை உள்ளது. நீங்கள் உயரத்தை மாற்றி அமைக்கவேண்டும் நீங்கள் இப்படி செய்யலாம். (சிரிப்பு) (கைத்தட்டல்) இதற்கு சிறிய கை உள்ளது. (கை தட்டி) (சிரிப்பு) (கைத்தட்டல்) நான் என் மைக் ஆஃப்டன் மோதிவிட்டேன், ஆனால் ஒன்றும் பிரச்சனை இல்லை சரி, நான் இந்த பாப்கார்னை மெல்லவேண்டும், அதனால் உங்கள் கைகளை சிறிது அதிகமாய் தட்டலாம்- (கைத்தட்டல்) சரி, இது உங்களின் சிறிய தனிப்பட்ட சூரியக் குடும்பம் நான் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிறேன், அதனால் எல்லாமும் என்னை சுற்றி சுழல வேண்டும். (சிரிப்பு) மீண்டும் தண்ணீர் கண்ணாடி, நாம் இங்கே தான் இருக்கிறோம். சத்தியம் செய்கிறேன் - தண்ணீர் உள்ளது - அதில் தண்ணீர் இல்லை, மன்னிக்கவும் இன்னும் இந்த கருவிக்கு உழைக்க வேண்டியுள்ளது இன்னும்,தண்ணீரை எடுத்து இங்கு வைக்கவேண்டியுள்ளது ஆனால் உங்கள் கைகள் சிறிதளவில் ஆடினால், யாரும் கவனிக்கப் போவதில்லை ஏனெனில் நீங்கள் மதிமயக்கும் உபகரணத்தை அணிந்து இருக்கிறீர்கள் நல்லது OK (ரோபோட் சத்தம்) (பாடுவது) ஓ, அது சிக்கிவிட்டது. ரோபாட்களுக்கு கூட மேடையில் அச்சம் ஏற்படுமோ என்று ஆறுதல் கொள்ளலாமா? அது சிறிது சிக்கிகொண்டது அவற்றின் மனித குணங்கள் ஓ காத்திரு, சிறிது பின்னோக்கி செல்லலாம், பின்னர் - (கண்ணாடி வீழ்கிறது) (சிரிப்பு) இது ஒரு அழகான நேரம் அல்லவா? (சிரிப்பு) (கைத்தட்டல்) என் இயந்திரம் பொறியியல் நகைச்சுவை போல் தெரிந்தாலும் நான் பெரிய செயலை செய்யும் போது ஏற்படும் தடுமாற்றமாக உணர்கிறேன் பொறியியல் உலகம் இந்த மகிழ்ச்சி மற்றும் மனத்தாழ்மை பெரும்பாலும் இழந்துவிட்டது எனக்கு இது ஒரு வழி வன்பொருள் பற்றி அறிய என் செயல்திறன் பற்றிய கவலை இல்லாமல். நான் அடிக்கடி கேட்டுக்கோள்வேன், பயனுள்ள ஏதாவது உருவாக்க போகிறேனா என்றாவது ஒருநாள். என்னுடைய பார்வையில் ஏற்கனவே என்னிடம் உள்ளது ஏனென்றால் இந்த வேலையை நான் செய்தேன் இதை நான் என்றுமே திட்டமிட்டதில்லை, அல்லது என்னால் முடியுமா - (கைத்தட்டல்) இதை நான் என்றுமே திட்டமிட்டதில்லை. நான் என்ன செய்கிறேன் என்ற என் ஆர்வத்தின் பலனாக இது நடந்தது நான் அந்த உற்சாகத்தை மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்கிறேன் இதுதான் எனக்கு உண்மையான அழகு, பயனில்லாத விஷயங்களை செய்கிறபோது ஏனென்றால் இது இந்த ஒப்புகை சிறந்த பதில் என்னவென்று உங்களுக்குத் தெரியாது. இது உலகம் எப்படி வேலைசெய்கிறது என உங்கள் எண்ணம் நினைப்பதை நிறுத்துகிறது. பல் துலக்கி ஹெல்மெட் ஒரு பதில் இல்லை, குறைந்தபட்சம் கேள்வி கேட்கிறீர்கள். நன்றி. (கைத்தட்டல்)