நடந்து கொண்டே ஜெபியுங்கள். உணவு அருந்திக்கொண்டே ஜெபியுங்கள். தொலைக்காட்சி பார்த்து கொண்டே ஜெபியுங்கள். இணையதளம் பார்க்கும் போதும் ஜெபியுங்கள். அனைத்தையும் செய்யுங்கள் ஜெபத்தோடு கூட. பாருங்கள், நீங்கள் நடக்கும்போது ஜெபித்தால் இயேசு எங்கு போக மாட்டாரோ அந்த இடத்திற்கு நீங்களும் போக மாட்டீர்கள். நீங்கள் பேசும் பொழுது ஜெபித்தால், பலனற்ற புறங்கூறுதல் வீண் வார்த்தைகள் இராது நீங்கள் ஜெபத்துடன் விழித்திருந்தால் உங்கள் மனசாட்சியையும், இருதயத்தையும் பாதிக்கும் காரியங்களில் சிக்க மாட்டீர்கள். ஏனெனில் வசனம் அனுமதியாத ஒரு காரியத்துக்காக ஜெபிக்க சொல்லி தேவன் ஒருபோதும் ஏவ மாட்டார்