100 என்ற எண்ணுடைய வர்க்கமூலத்தை கண்டுபிடிக்க வேண்டும். இதை பெரிதாக எழுதுகிறேன். இப்படிதான் வர்க்கமூலத்தை குறிக்கவேண்டும். 100உடைய வர்க்கமூலம். இந்த அடையாளம் நேர்ம வர்க்கமூலத்தை குறிக்கும். எதிர்ம எண்களை பற்றி தெரிந்ததென்றால் எதிர்ம வர்க்கமூலமும் இருக்கிறது என்று தெரியும் ஆனால் இந்த அடையாளம் நேர்ம வர்க்கமூலத்தை தான் குறிக்கும். கேள்வி என்னவென்று யோசிக்கலாம். நாம் ஒரு எண்ணை கண்டுபிடிக்க வேண்டும் அந்த எண்ணை அந்த எண்ணாலையே பெருக்கினால், 100 வரும். எந்த எண் இது? 9 பெருக்கல் 9 என்றால் 81 தான். 10 பெருக்கல் 10 என்றால் 100! நான் இதை இப்படி எழுதிகிறேன்- நீங்கள் இப்படி எழுத தேவையில்லை ஆனால் நீங்கள் இதை "10 பெருக்கல் 10"உடைய வர்க்கமூலம் என்றும் எழுதலாம். ஒரு எண்ணை அதே எண்ணால் பெருக்கி அதனுடைய வர்க்கமூலத்தை எடுத்தால், அதே எண் கிடைக்கும். இது பத்துக்கு சமம். 100உடைய வர்க்கமூலம் 10 இதையே நீங்கள் 10உடைய வர்க்கம் 100 என்று சொல்லலாம்.