-
20 மற்றும் 40-ன் மீப்பெரு பொது வகுத்தி என்ன?
-
அதாவது "மீ.பொ.வ(20,40) = ?"
-
"மீப்பெரு பொது வகுத்தி" என்பது சற்று வேடிக்கையாக இருக்கலாம்.
-
அப்படியென்றால், 20 மற்றும் 40-ஐ வகுக்கும் பெரிய பொதுவான எண் என்ன?
-
இதில் நீங்கள் கவனிக்க வேண்டியது, 20 என்பதே 40 ஐ வகுக்கும்.
-
அல்லது 40, 20-ஆல் மீதம் இன்றி வகுபடும்
-
எனவே, பெரிய எண் என்பது 20 மற்றும் 40-ன் காரணி, அதாவது 20.
-
20 என்பது 20x1, 40 என்பது 20x2
-
நாம் நேரடியாக 20 என்று எழுதலாம் .
-
மேலும் சிலவற்றைப் பார்க்கலாம்
-
10 மற்றும் 7-ன் மீப்பெரு பொது வகுத்தி என்ன?
-
10 மற்றும் 7-ன் மீப்பெரு பொது வகுத்தி, நம்மிடம் 10 இருக்கிறது
-
இப்பொழுது 10 மற்றும் 7-ன் மீ.பொ.வ. என்ன?
-
இதற்கு இரு வழிகள் உள்ளன
-
முதலில், நீங்கள் இதன் அணைத்து காரணிகளையும் எழுதி,
-
அதில் இரண்டிற்கும் பொதுவான பெரிய எண் எது என்று பார்க்க வேண்டும்
-
எடுத்துக்காட்டாக நம்மிடம் 10 உள்ளது
-
10 என்பது 1 பெருக்கல் 10, அல்லது 2 பெருக்கல் 5
-
1,2,5 மற்றும் 10, இவை அனைத்தும் 10-ன் காரணிகள் .
-
இவை அனைத்தும் 10-ஐ வகுக்கும் எண்கள். இவை தான் மீப்பெரு பொது வகுத்தி
-
7, இதன் காரணிகள் என்ன? 7 ஒரு பகா எண். ஆகையால் 1 மற்றும் 7 தான் இதன் காரணி.
-
இதில் மீப்பெறு பொது வகுத்தி எது? இங்கு ஒரே ஒரு காரணி தான் உள்ளது, 1.
-
1 தான் இதன் பொது வகுத்தி
-
எனவே, 10 மற்றும் 7-ன் மீ.பொ.வ. 1 தான்.
-
இதை எழுதிக்கொள்கிறேன், 1.
-
மேலும் ஒரு கணக்கு
-
21 மற்றும் 30-ன் மீப்பெறு பொது வகுத்தி என்ன?
-
21 மற்றும் 30 எண்களை பார்க்கப்போகிறோம்
-
இதன் மீப்பெறு பொது வகுத்தியை கண்டறியப் போகிறோம். அதாவது மீ.பொ.வ.(21, 30)
-
இதற்கும் இரண்டு வழிகள் உள்ளன.
-
போன கணக்கைப் போல இதன் காரணிகளை கண்டறிய வேண்டும்
-
21-ன் காரணிகள் 1 மற்றும் 21, பிறகு 3 மற்றும் 7
-
30 -ன் காரணிகள் 1 மற்றும் 30, பிறகு 2 மற்றும் 15
-
இன்னும் சிறிது இடம் தேவை....
-
1 மற்றும் 30, 2 மற்றும் 15, 3 மற்றும் 10, 5 மற்றும் 6. இவை அனைத்தும் 30-ன் காரணிகள்.
-
இதில் பொது வகுத்தி என்ன? 1 மற்றும் 3, இரண்டுமே பொது வகுத்தி.
-
இதில் பெரிய பொது காரணி அல்லது வகுத்தி எது? மூன்று. 3 தான் விடை
-
இன்னொரு வழியில் செய்யலாம், அது பகாக்காரணி படுத்துதல் முறையில் செய்வது?
-
21-ன் பகாக்காரணிகள், 3 பெருக்கல் 7, 3x7.
-
30-ன் பகாக்காரணிகள் 3x10, பிறகு 10 என்பது 2x5,
-
இதில் 21 மற்றும் 30-ஐ வகுக்கும் பொதுவான காரணிகள் எவை?
-
இதில், பொதுவாக இருப்பது 3 மட்டும் தான்
-
21 மற்றும் 30-ன் மீப்பேறு பொது வகுத்தி அல்லது காரணி, 3 தான்.
-
இதில் பொது வகுத்தி ஏதும் இல்லையெனில், 1 தான் விடை.
-
இதை முழுவதுமாக புரிந்துகொள்ள மேலும் ஒரு எடுத்துக்காட்டைப் பார்க்கலாம்
-
105 மற்றும் 30-ன் மீப்பெறு பொது வகுத்தி என்ன?
-
இதற்கு பக்கக்காரணிகளை கண்டறியலாம்.
-
ஏனெனில் 105-ன் அணைத்து காரணிகளையும் கண்டறிவது சற்று கடினமாக இருக்கலாம்,
-
ஆகையால் 105-ன் பொதுக்காரணிகள் 5x21 பிறகு 21 என்பது 3x7 ஆகும்.
-
105 -ன் பகாக்காரணிகள் 3x5x7.
-
30-ன் பகாக்காரணிகள் 2x3x5.
-
இதில் பொதுவாக உள்ள பகாக்காரணிகள் எவை?
-
இதில் 3 மற்றும் 5 பொதுவாக உள்ளது.
-
ஆகையால், மீப்பெறு பொது வகுத்தி இதன் பெருக்கே ஆகும்
-
105 மற்றும் 30-ன் மீ.பொ.வ. 3x5x15.
-
நீங்கள் எந்த வழியை வேண்டுமானாலும் பின்பற்றலாம். அணைத்து காரணிகள் அல்லது வகுத்திகளையும் கண்டறிந்து அதில் மீ.பொ.வை தேர்ந்தெடுக்கலாம்
-
இல்லையெனில் பகாக்காரணிகளை கண்டறிந்து அதன் மீப்பேறு பொதுவை கண்டறியலாம்.
-
அதன் பெருக்குத் தொகையே மீப்பெறு பொது வகுத்தி ஆகும்.