-
--
-
சூசனுக்கு ஒரு தேர்வு,
அதை 96 நிமிடத்தில் எழுதவேண்டும்.
-
தேர்வு 1:59 PMக்குத் தொடங்குகிறது.
-
சூசனுக்கு 4:00 PMக்கு
வாலிபால் பயிற்சி வகுப்பு உள்ளது
-
சூசனுக்குத் தேர்வு முடிந்தபிறகு
-
வாலிபால் பயிற்சி தொடங்க
எவ்வளவு நேரமாகும்?
-
இதைப்பற்றிக் கொஞ்சம் சிந்திப்போம்
-
1:59க்குத் தேர்வு தொடங்குகிறது
-
கொஞ்சம் விநோதமான நேரம்தான்!
-
இருக்கட்டும்!
-
இங்கே ஒரு சிறிய
நேரக்கோட்டை வரைவோம்
-
இது 2 PM
-
இது 3:00 PM.
-
--
-
அதன்பிறகு 4 PM வருகிறது
-
அப்போதுதான் வாலிபால் பயிற்சி ஆரம்பம்
-
இது வாலிபால் பயிற்சி
-
4:00 PMக்குத் தொடங்கி
வாலிபால் பயிற்சி நடக்கும்
-
தேர்வு 1:59க்குத் தொடங்குகிறது
-
நேரக் கோட்டைத் தொடர்வோம்
-
இது 1:00 PM
-
--
-
தேர்வு 1:59க்குத் தொடங்குகிறது,
அதாவது, 2 PMக்கு 1 நிமிடம் முன்பாக
-
ஒரு மணியில் 60 நிமிடங்கள் உள்ளன
-
ஆகவே, 1:59 என்பது
2:00 PMக்கு 1 நிமிடம் முன்பாக
-
அதை இங்கே வரைவோம்
-
இதுதான் 1:59 PM என்று வைத்துக்கொள்வோம்
-
2:00 PMக்கு இன்னும் 1 நிமிடம் உள்ளது
-
அதன்பிறகு நாம் 96 நிமிடங்களை
அளவிடவேண்டும்
-
60 நிமிடங்கள் சென்றால் 3:00 PM
-
இதுவரை நாம் 61 நிமிடங்களை அளந்துள்ளோம்
-
இது 1 நிமிடம்
-
தேர்வு தொடங்கி இதுவரை இவ்வளவு
-
நேரமாகியுள்ளது
-
1 நிமிடத்தில் 2:00 PM,
61 நிமிடத்தில் 3:00 PM
-
4:00 PMவரை சென்றால்,
இன்னும் 60 நிமிடம் சேர்ந்துவிடும்
-
ஆக, மொத்தம் 121 நிமிடங்கள்.
அது தேர்வு நேரத்தைவிட அதிகம்
-
மொத்தத் தேர்வு நேரம் 96 நிமிடங்கள்
-
ஆகவே, நாம் இங்கே எங்கேயோ
நிறுத்தவேண்டும்
-
உதாரணமாக, இங்கே!
-
இதுதான் 96 நிமிடங்கள் என்று வைப்போம்
-
இப்போது நாம் கண்டுபிடிக்கவேண்டியது,
தேர்வு இன்னும் எவ்வளவு நேரம் நடக்கும்?
-
இங்கிருந்து இங்கே எவ்வளவு நேரம்?
-
அதாவது, இந்த இரு நேரங்களிடையே
-
எவ்வளவு இடைவெளி?
-
அதைக் கண்டுபிடிக்க என்ன வழி?
-
தேர்வு தொடங்கி 96 நிமிடங்கள் நிறைவடையும்
-
நேரம் எது?
-
3 மணிக்கு, 61 நிமிடங்களாகியிருக்கிறது
-
தேர்வு நிறைவடைய இன்னும்
-
எத்தனை நிமிடங்கள் உள்ளன?
-
96லிருந்து 61ஐக் கழிக்கவேண்டும்
-
3 மணிக்குப்பிறகு
-
96 - 61, அதாவது 35 நிமிடங்கள்
-
ஆகவே, இந்த நேரம் 3:35
-
நம் கேள்வி என்ன?
-
3:35லிருந்து 4:00PMக்கு எவ்வளவு நேரம்?
-
ஒரு மணிக்கு 60 நிமிடங்கள்
-
ஆகவே, 4:00 PM என்பது 60வது நிமிடம்
-
60 - 35 என்றால், 25 நிமிடங்கள்
-
தேர்வு நிறைவடைந்து 25 நிமிடங்களில்
-
வாலிபால் பயிற்சி தொடங்கும்
-
நாம் கற்றுக்கொண்டது,
-
1:59லிருந்து 2:00க்கு ஒரு நிமிடம்,
பிறகு 60 நிமிடங்கள்
-
மொத்தம் 61 நிமிடங்கள்
-
அதன்பிறகு 35 நிமிடங்கள்,
மொத்தம் 96 நிமிடங்கள்
-
தேர்வு 3:35க்கு நிறைவடைகிறது
-
அதன்பிறகு 4:00 மணிக்கு
25 நிமிடங்கள் உள்ளன
-
--